விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. உற்பத்தி அதிகரிக்க உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை எனது தனிக்குழு அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் என்பது மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.





இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள கச்சநாயக்கன்பட்டி பகுதியில் ஆர்யா பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு என்பவர் படுகாயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கையில் பழங்கால கழிவு நீர்க் குழாய் கண்டுபிடிப்பு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி




அதே போல் ஸ்ரீ வில்லிபுத்தூர்  அருகே ரங்கபாளையம் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பட்டாசுகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்ததில் 11 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வரும் பட்சத்தில் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.