திருப்பூரில் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்தவர் நிலக்கோட்டையில் தனது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொங்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன்  அழகுராஜ் (வயது 33). இவர்  திருப்பூர் மாநகரம் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா (30) என்ற மனைவியும்,  சாய்சித்தார்த் (8), தட்க்ஷபிரகலாத் (7) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.


ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!


அழகுராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்ததாகவும், அழகுராஜுக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிப்பழக்கம் அதிகமாக இருந்து வந்ததால் அவரை திருப்பூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமாக திருப்பூர் டி.கே.டி மில் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து பின்னர் பணிக்கு வந்தார்.




கடந்த 12.10.23 தேதி விடுமுறையில் தனது சொந்த ஊரான நிலக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அழகுராஜின் மனைவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்து கடந்த 5 மாதமாக அவரது பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் பழனியில் இருந்ததாகவு,ம் மனைவியை பார்த்து விட்டு, நிலக்கோட்டை  வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவ நாள் அன்று அழகுராஜின் தாய் வெள்ளையம்மாள் ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூஜையறையில் மட்டை கம்பில் காவி நிற வேஷ்டி துணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இறக்கி பார்த்தபோது அழகுராஜின் கையில் இரண்டு காகிதங்களில் தனது இறப்பிற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது,  


Israel - Hmas War: நள்ளிரவில் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மரணம்.. இஸ்ரேல் விரையும் பைடன்




இறந்த அழகு ராஜின் தாய் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராஜிடம் தனது மகனின் இறப்பில் சந்தேகமில்லை என்று கூறியதால் தற்கொலை என பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை பகுதியில் ஒரு போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)