சிவகங்கையில் நடைபெற்ற திமுக சாதனைக் கூட்டத்தில் சேலை வாங்குவதற்காக பெண்களின் கூட்டம் அலைமோதியது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு திமுக அரசின் ஓராண்டு சாதனையை குறித்து மக்களுக்கு எடுத்து  கூறினார். சாதனை விளக்க கூட்டத்திற்கு பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கூட்டத்திற்கு பணம்  கொடுத்து கூட்டி வந்தால் பாதியிலே சென்று விடுவார்கள் என்று எண்ணிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் முடிந்ததும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்று கூறி அழைத்து வந்ததாக தெரிகிறது. 


தேனி மாவட்டத்தில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் பல்வேறு முனை போட்டிகள் உருவாகியுள்ள நிலையில் திமுக தலைமை அதிரடி முடிவு. தேனியில் யாருக்கு அந்த ஜாக்பாட் தெரியுமா?




இரவு 10 மணியை தாண்டி கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் கலந்து கொண்ட பெண்கள் சேலை வாங்க மேடை நோக்கி படை எடுத்து வந்தனர். கூட்டம் முடிந்து மேடையை விட்டு அமைச்சர்கள் செல்லவும் மேடையில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துரை மற்றும் திமுகவினர் பெண்களுக்கு சேலை வழங்கினர்.  இதை வாங்க பெண்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மேடை ஏற முயற்சி செய்தனர் . இதில் வயதான பெண்கள் மேடையில் விழுந்து எழுந்து சென்றனர் .


சத்தத்தால் அதிர்ந்த மதுரை மாநகராட்சி கூட்டம் ; பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட மேயர் !




Actor Vijay : 4 மாதத்தில் 3 முதல்வர்களை சந்தித்த நடிகர் விஜய்... 2024க்கு தயாராகும் மெகா திட்டம்!


பெண்கள் கூட்டத்தை சரி செய்கிறோம் என்று திமுகவினர் சிலர் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துளது. பெண்கள் கூட்டத்தை ஒழுங்க படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். போலீசார் ஆத்திரத்தில் பெண்களை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக சாதனை விளக்க கூட்டத்தில் சேலை வாங்க பெண்கள்  கையேந்தும் நிலையை நினைத்து கூட்டத்திற்கு வந்த சில மூத்த திமுகவினர் வருத்தங்களும் தெரிவித்தனர். 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண