திமுக அரசு ஆட்சியமைத்து ஒருவருட காலத்தை நிறைவு செய்துள்ளது. தனது கட்சியின் உட்கட்சி தேர்தலையும் நடத்தி முடித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது , மாவட்ட செயலாளர்களை நியமிப்பது என தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளை திமுக செய்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆளுங்கட்சியாக வந்துள்ளதால் கட்சியில் பதவிகளை வாங்குவதற்கு உட்கட்சியில் கட்சியினரிடையே பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இது நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல மாவட்ட செயலாளர் பதவிகளுக்கும் பல்வேறு முனைகளில் போட்டிகள் நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களுக்கான போட்டியும் நடந்து வருகிறது. தேனி தெற்கு மாவட்ட செயலாளரக இருப்பவர் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ராமகிருஸ்ணன். தேனி வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் தங்கதமிழ்செல்வன். இருவருக்குமிடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது. தேனி தெற்கு , வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை ஒன்றாக்கி ஒரே மாவட்ட செயலாளராக மாற்ற வேண்டுமென்ற இருவருக்குமிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. ஆனால் சமீபத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது இரண்டு மாவட்ட செயலாளர்களையும் மாற்றி புதியதாக தேனிய சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளரா அறிவிக்க போவதாக ஒரு தகவலும் பரவி வருகிறது.
அதிமுகவிலருந்து அமமுகவிற்கு மாறி பிறகு திமுகவில் சேர்ந்த தங்கதமிழ்செல்வன் தனக்கு கொடுத்த போடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் தோல்வியை கண்ட பின்னர் கட்சியோட தலைமை தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக சொன்னதும் ஆனா, இப்ப அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பெயர் பட்டியலில் தன்னோட பெயர் இல்லனதும் அதிருப்தியா இருக்கார்னும் சொல்லப்படுது. சரி மாவட்டத்த ஒன்னாக்கி தனக்கு கொடுத்துருவாங்க அப்டிங்குற என்னத்துல இருக்க இவருக்கு தேனியோட தெற்கு மாவட்ட செயலாளர் கொஞ்சம் டப் கொடுப்பார்னு பேசப்படுது. அதுக்கு காரணம் அவர் திமுகவுல மூத்த கட்சி நிர்வாகி.
இது ஒரு பக்கம் இருக்க இந்த இரண்டு பேர்மேலயும் ஒரு அதிருப்தி ரிப்போர்ட் கட்சியோட தலைமைக்கு போய்ருக்குனு பேசப்படுது. அது என்னனு விசாரிக்கப்றதா வடக்கு மாவட்ட செயலாளரா இருக்க தங்க தமிழ்செவன் பார்வையில நடந்த தேனி அல்லி நகர நகர்மன்ற தலைவர் பதவி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியும் கட்சி தலைமை உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் குறிப்பா பேரம் பேசும் ஒரு கவின்சிலரோட ஆடியோ பரவியதுல இவரோட பேர் அடிபட்டதும் இவருக்கு மைனசா அமஞ்சுருக்கு.
அதே போலதா தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஸ்ணன் தன்னொட பகுதிகள்ல உட்கட்சி தேர்தல் நடத்துனதுல பல்வேறு குளறுபடிகள் செய்ததாகவும் அதுக்கு அவரு கூட இருக்க கட்சி ஆளுகளே எதிரா போர்க்கொடி தூக்குனதும் சில இடங்கள்ல அவர எதிர்த்து மாவட்ட செயலாளர் பதவிய மாத்தச்சொல்லி அதே பகுதிய சேர்ந்தவங்களே சிலர் சாலை மறியல் செய்ய வச்சதும் இது போன்ற செயல்பாடுகள் இரு மாவட்ட செயலாளர்கள் மீது தொடர் புகார் கட்சி தலைமைக்கு போனதாகவும் புதுசா தேனி மாவட்டத்துல திமுகவோட மாவட்ட செயலாளர் பதவி யாருக்குனு தெரியலங்குற குழப்பத்துலயும் மாவட்டத்த ஒன்னாக்கி தங்க தமிழ்செல்வனுக்கு கொடுத்துருவாங்கனு அவரோட ஆதரவாளர்களும் காத்துட்டு இருக்காங்கனு பேசப்படுது . இப்படி கட்சி பதவிய பிடிக்க பல்வேறு விதமா போட்டி நடக்குதுனு கட்சி வட்டாரங்கள்ல பேசப்படுது. பொறுத்திருந்துதான் பாக்கனும் இந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு எப்படி ஜாக்பாட் அடிக்க போகுதுனு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்