நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 20-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.






இந்த படத்தை தமிழக முதல்வரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அவருக்கு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பூங்கொத்து அளித்து வரவேற்றார். படத்தை பார்த்த பின்பு படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனிகபூர், ராகுல் மற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் என அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை கூறினார்.







இந்த படத்தை பார்க்க வந்த மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற வேட்டி, சட்டையுடன் வராமல் நீல நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து இளைஞரைப் போல வந்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுகிறது. நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெயிலரும், டீசரும் ஏற்கனவே யூ டியூபில் வெளியாகி ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.




நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ்கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரூபன் எடிட் செய்துள்ளார். திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.




ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக நாயகனாக அறிமுகமாகிய உதயநிதி ஸ்டாலின் தொடக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தாலும், மனிதன் படத்திற்கு பிறகு தரமான கதை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய சைக்கோ படம் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ராஜா காமராஜா ஏற்கனவே கனா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் மதுரை செல்லூர் 50 அடி சாலையில் 50 அடி நீள  உதயநிதி ஸ்டாலின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு மதுரை கோபுரம் சினிமாஸ் வாசலில் பிரமாண்ட கட்டவுட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஆனா நீ படிக்கணும் தங்கம்” : தைரியம் கொடுத்த தாய்.. தந்தை உயிரிழந்த அன்றே தேர்வெழுத வந்த +2 மாணவி..