சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூர் கண்மாய் நிரம்பி வழிகிறது. விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியதால் வாழை, பருத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்று பாசனப்பகுதியில் மேலநெட்டூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 750 ஏக்கர் பரப்பளவுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்றுவருகின்றன.


Narikuravar Community - ST : நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..




வைகை ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்காலும், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் கண்மாய் நீர் தேங்கியுள்ளது. முட்டக்குறிச்சி பகுதியில் 50 ஏக்கர், கோச்சடை பகுதியில் 30 ஏக்கர், அயன்குறிச்சிப்பகுதியில் 15 ஏக்கர் நிலங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னங்கன்று, பருத்தி செடிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.


Video : 1,150 அடி.. உலகிலேயே 19-வது உயர்ந்த கோபுரம்.. நாளை திறக்கப்படும் இலங்கையின் தாமரை கோபுரம்.. வைரலாகும் வீடியோ..


Sikh : 1984-இல் நடந்தது சீக்கிய கலவரம் அல்ல.. இனப்படுகொலை.. கொந்தளித்த நடிகர்


மேலும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்திருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தற்போது மேலநெட்டூர் கண்மாய் நிறைந்திருப்பதால் இப்பகுதியில் விவசாயிகள் முன் கூட்டியே தங்களது விவசாயப்பணிகளை தொடங்கி விதைப்பு நடவுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்