மானமதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20.1.2025)  காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது.

 

மின் விநியோகம் நிறுத்தம்

 

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இது குறித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மின் செயற்பொறியாளர் ஜான்சன் மானமதுரை பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் நாளை 20.1.2025 மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

 

மின்தடை ஏற்படும் பகுதி

 

திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தடி,மணலூர்,அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம்,காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாகும்.