தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழ்ச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாகக் கருதப்படுகிறது.



 

keezhadi excavation: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

 


 

வரலாற்றில் புதிய வெளிச்சம்




தந்தத்தினாலான ஆட்டக்காய்

 

இந்நிலையில் கீழடியில் 120 செ.மீ. ஆழத்தில்  தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உருளைவடிவிலான உடற்பகுதியை உடைய இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோளவடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. சிறிய அளவிலான இந்த ஆட்டக்காய் 1.3 செ.மீ உயரமும் 1.5 செ.மீ விட்டம் கொண்ட தலைப்பகுதியையும் 1.3 செ.மீ விட்டம் கொண்ட  அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.

 

கருமை நிறமுடைய இந்த ஆட்டக்காய் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது. தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழ்ச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாகக் கருதப்படுகிறது.