சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அதன்படி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அறிவு சார் மைய கட்டிட பணியை ஆய்வு செய்தார். சிறுகூடல்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுர கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். அதே போல் சிவகங்க ஒன்றியத்தில் இலங்கை அகதிகள் முகாம், விளையாட்டு அரங்க நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.



 

இப்படி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்காக மாவட்ட தி.மு.க.,வினர் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக காரைக்குடி வரும்  உதயநிதியை வரவேற்பதற்காக சாலையில் இருபுறமும்   தி.மு.க., கொடி கம்பங்கள்  நடப்பட்டன. இந்நிலையில்  நிகழ்ச்சிகள் முடிந்து உதயநிதி கிளம்பியதும் நள்ளிரவு நடப்பட்டிருந்த தி.மு.க., கொடிகம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மருதுபாண்டியர் நகர்  பகுதியில் கொடி கம்பங்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் தாக்கி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொடிக் கம்பம் நடும் ஒப்பந்ததாரர் வீரமலை (54) என்பவர் பரிதாபமாக பலியானார். மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



 

மின்சாரம் தாக்கி கொடி ஒப்பந்தகாரர் ஏழுமலை இறந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி கொடி கம்பங்கள் நடும் போது தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவருகிறது இதற்கு அரசு முற்றுபுள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.