கைது செய்யப்பட்ட நபர்கள் தப்பிக்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டு கால் முறிந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர் குற்றச் சம்பவங்கள் சிவகங்கையில்


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் அதிகளவு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக சாதிரீதியான மோதல், பழிக்குப் பழி, கள்ளத்தொடர்பான மோதல், போதைப் பொருட்கள் பயன்பாடு என பல்வேறு சட்ட விரோத செயல் நடைபெறுகிறது. காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பட்டா கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டல்விடுத்து வீடியோ வெளியிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கொலை குற்றம் தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


- தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?


விபத்தில் கால் முறிவு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசையை சேர்ந்த இளைஞர் பிரவீனை, கடந்த சில நாட்களுக்கு முன் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதனை அடுத்து  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மானாமதுரை காவல் நிலைய போலீசார் சங்கமங்களத்தை சேர்ந்த சசிகுமார், தனுஷ், சுதர்சன்,  ரகுபதி, மற்றும் கிளங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் ஆகிய ஐந்து பேரை கைது செய்யும் முயற்சியில்  ஈடுபட்டனர். அப்போது சசிகுமார் உட்பட மேலும் இரண்டு பேர் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..


குற்றங்களை குறைக்க ஆலோசனை நடத்த வேண்டும்


இதுகுறித்து சிவகங்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில்...,” சமீபத்தில் நடைபெற்ற கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனாலும் சிவகங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை கொண்டு தடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்கள் ஓரளவு குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதே போல் மாவட்ட நிர்வாகம் சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். வேலையின்மை காரணமும் குற்ற சம்பவம் அதிகரிப்பதற்கான முக்கிய  காரணமாக அமைக்கிறது. தொடர்ந்து காவல்துறையினர் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் அடிப்படையில் செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.