அமைச்சருக்கு மீனாட்சி தாய் மட்டுள்ள அங்கு அசைந்து வரும் யானையின் மீதும் கொள்ளைப் பிரியம் தான்.


திராவிடமும் - ஆன்மீகமும்


"பெரியார், அண்ணா வழியில் சமத்துவம் சமூக நீதி என பகுத்தறிவு வழியில் பயணிக்கும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் குடும்பத்தினர், பாரம்பரியமாக ஆன்மீகத்திலும் கோலோச்சி பல்வேறு அறத்தொண்டுகளையும் செய்துள்ளனர். தமிழவேல் சர்.பி.டி. ராஜன் அவர்களின் மகன் பழனிவேல் ராஜனும்,  பேரன் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் தொடர்ந்து அவர்களது, பாரம்பரிய பணியினை தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.


தீராத முருக பக்தி


சர் பி.டி.ராஜன் அவர்களின் ஆன்மீகத்தொண்டு அளப்பரியது. வடபழனி முருகன் கோயில் என்ற பெயரை, சென்னையில் வாழும் மக்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும், பிற பகுதியில் உள்ளவர்களுக்கும் தெரியும். இதனை இந்த நிலைக்கு உயர்த்தி காட்டியவர் ராஜன் அவர்கள் தான். வடபழனி முருகன் திருக்கோயில் மாண்புற அமைவதற்கு காரணமாக இருந்துள்ளார். ”மயிலுண்டு பயம் இல்லை, புகழுண்டு குறை இல்லை” - என்ற எண்ணத்தோடு முருக சிந்தனையுடனும் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் வடபழனி திருக்கோயிலுக்கு பல்வேறு விடயங்களை செய்து கொடுத்துள்ளார்.


அளப்பரிய ஆன்மீக தொண்டு


அதேபோல் ராஜன் அவர்கள், கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயில் தீயினால் சேதம் அடைந்த  சூழ்நிலையில் அதன் விக்கிரகத்தை சரி செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார். மக்களோடு மக்களாய், ஊர்வலமாக இணைந்து இறை பணிக்கான காரியங்களை பல ஊர்களுக்கு எடுத்துச் சென்றார். பணி நிறைவடையும் வரை சபரிமலை ஐயப்பனை திருப்பணி செய்து, எல்லா பணிகளும் அவர் உடன் இருந்தார். இதே போல் மதுரை மாவட்டத்தில் உள்ள மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் உள்ள கோயிலை திருப்பணி செய்து உயர்த்தினார். முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலைக்கு கோரிக்கையாக இருந்த வேல் பிரதிஷ்டையும் செய்து முடித்துள்ளார்.  உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திருப்பணி வேலைகளை கடும் சிரமத்திற்கு நடுவே விடா முயற்சியினால் செய்து முடித்தார். இப்படி இந்தியா முழுவதும் கோயில்களுக்கு இறைதொண்டு செய்து கொடுத்துள்ளார். இப்படியான ஆன்மீக பணி சுடர் ஏந்தியபடி தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தொடர்கிறது.


தாத்தா, அப்பா வழியில் மீனாட்சி மைந்தனாக


அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், மதுரை அரசாலும் மீனாட்சியை எப்போதும் வணங்கிச் செல்வார். மரியாதை நிமித்தமாக பரிசளுக்கும் போது கூட மீனாட்சியம்மனின் வடிவில் செய்த நினைவு பரிசுகளை தான் அதிகம் வழங்குவார். அவருக்கு மீனாட்சி தாய் மட்டுள்ள அங்கு அசைந்து வரும் யானையின் மீதும் கொள்ளைப் பிரியம் தான். ஆம் மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு கண் நோய் பாதிக்கப்பட்டது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து அதற்கு சிகிச்சை அளிக்க வைத்தார். பின்னர் அதற்கு பிடித்தது போல் குளிக்க குளம், ஸ்சவர் என்று தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். எப்போதும் அவரின் மனதிற்கு மீனாட்சியம்மன் கோயில் நெருக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை மீனாட்சி மைந்தன் என்றே ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகின்றனர்.


குல தெய்வ வழிபாடு


பெரியாண்டவர் வாலகுருநாத சாமியும், அங்காள ஈஸ்வரியும் ஓரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. இந்த கோயில் மதுரை சோழவந்தான் மேலரத வீதியில் உள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் குடும்பத்தின் குல தெய்வம் என்பதால் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று வழிபாடு செய்கிறார். கோயில் தரப்பில் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்து கொடுப்பார்.


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன்


முருகனின் மூன்றாவது படைவீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. இங்கும் அமைச்சர் அதிகமாக செல்வதுண்டு. குறிப்பாக ராக்காலை பூஜையில் கலந்துகொள்ள விரும்புவார். பழனி முருகன் கோயிலில் இரவு 8.30 மணிக்குமேல் ராக்கால பூஜை நடைபெறும். இந்த பூஜைக்கு பின் நடைசாத்தப்பட்டு முருகன் பாதம் பல்லக்கில் வைத்து பள்ளியறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து அன்றைய வரவு செலவுகள் படிக்கப்பட்ட பின்னர் பூஜை நடைபெற்று பள்ளியறை கதவு சாத்தப்படும். மீண்டும் அதிகாலை கோயில் திறக்கப்படும் போது, பள்ளியறையிலிருந்து பூஜை செய்து பாதம் சன்னதிக்கு கொண்டு வந்து நடை திறந்து விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.


அன்னதானங்கள்


இப்படி பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் தன் குடும்ப பாரம்பரிய வழியில் பல்வேறு ஆன்மீக தொண்டுகளை செய்துவருகிறார். தங்களுக்கு என இருக்கும் மண்டபடி வழியாக அன்னதானங்களை அதிகம் செய்து வருகிறார். சத்தமில்லாமல் பல கோயில்களுக்கு பெரிய, பெரிய வேண்டுதல்களையும்  செய்துமுடிக்கிறார்.