தமிழகத்திற்கு ஜெட் வேகத்தில் துரோகம் நடைபெற்று வருகிறது, இன்றைக்கு ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் ஆகி வருகிறது, அதைப் பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை என்றார்

 


 ஆர்.பி.உதயகுமார்

 

மதுரை பாலமேடு பேரூராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது...,” முல்லைப் பெரியார் பிரச்னையில் அம்மாவின் ஆட்சியில் 2014-ம் ஆண்டு மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் அணை பாதுகாப்பாக உள்ளது. இன்று பல்வேறு வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்தில் வழங்கினர்.

 

அதனைத் தொடர்ந்து மாபெரும் தீர்ப்பை தமிழகத்திற்கு அம்மா பெற்று தந்தார். தற்பொழுது அணை பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி ஆகிவிட்டது. மத்திய நீர்வளத் துறை ஆணையம் ஆணைக்குறித்து மறு ஆய்வு செய்ய 12 மாதம் அவகாசம் அளித்துள்ளது, இந்நேரம் தமிழக முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் கொதித்து எழுந்திருக்க வேண்டாமா? முதலமைச்சர் அமெரிக்காவில் கோர்ட் சூட் மாட்டிக் கொண்டு போட்டோசூட் நடத்துகிறார். அமைச்சர் துரைமுருகனோ சிங்கப்பூர் சென்றுவிட்டார், வாரிசு அமைச்சர் உதயநிதியோ வாய் திறக்கவில்லை,?

 

மேகதாது குறித்து வழக்கு உள்ளது

 

அது மட்டுமல்லாது இன்றைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் தமிழகத்திற்கு வந்திருந்தார், வாரிசு அமைச்சர் உதயநிதியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள குறுஞ்சி இல்லத்தில் பார்த்துவிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பலன் என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார், அணை கட்டினால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும். ஏற்கனவே காவிரி உரிமை குறித்து விவசாயிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தனர், ஏற்கனவே கர்நாடகாவில் கூறியதற்கு விவசாயிகள் மனம் வேதனை அடைந்தனர்,தற்போது தமிழ்நாட்டுக்கே வந்து கர்நாடக துணை முதலமைச்சர் கூறுகிறார், ஏற்கனவே மேகதாது குறித்து வழக்கு உள்ளது.

 

ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் வைக்கப்படுகிறது

 

 இதே காவேரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் அவையை முடக்கி காவேரி ஒழுங்காற்று குழுவை எடப்பாடியார் அமைத்தார் ,ஆனால் இன்றைக்கு மேகதாது அணைக்குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு முதலமைச்சரும்,துறை அமைச்சரும், வாரிசு அமைச்சரும் வாய் திறக்கவில்லை, கூட்டணி தர்மத்திற்காக வாய் போட்டு சட்டம் போட்டு விட்டதா? இன்றைக்கு தமிழகத்திற்கு ஜெட் வேகத்தில் துரோகம் நடைபெற்று வருகிறது, இன்றைக்கு ஜீவாதார பிரச்னை எல்லாம் அடமானம் ஆகி வருகிறது. அதைப் பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. மதுரை மாவட்டத்திற்கு ஜல்லிக்கட்டு அரங்கம், நூலகைத் தவிர வேறு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை  ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு மின்சார கட்டணத்தை கூட சரியாக கட்டவில்லை என்று செய்திகள் வருகிறது, இன்றைக்கு பக்கத்து மாநிலமான கர்நாடகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை இதைக் கண்டு தமிழக அரசு பொங்கி எழ வேண்டாமா? உங்களால் மத்திய அரசிடம் நிதியை பெற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்,  எடப்பாடியாரிடம் ஒப்படையுங்கள்  மத்திய அரசின் நிதியை பெற்று தருவார் என பேசினர்.