The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..

GOAT Review in Tamil : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு படியுங்கள்

Continues below advertisement

தி கோட் விமர்சனம்(The GOAT Review)


Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் கடைசி இரண்டு படங்களில் ஒன்று தி கோட். அதனால் இப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தி கோட் திரைப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது தி கோட் ? விமர்சனம் இதோ.

தி கோட் கதை


தி கோட் படத்தின் டிரைலரிலேயே கதை சொல்லப்பட்டிருக்கிறது. விஜய்( காந்தி) பிரபுதேவாப் (கல்யாண்), பிரசாந்த் (சுனில்) ஜெயராம்( நஸிர்) , அஜ்மல் அனைவரும் SATS எனப்படும் ஆண்டி டெரரிஸம் ஸ்பெஷலிஸ்ட் குழுவிற்காக ரகசியமாக சேலை செய்து வருகிறார்கள். இதே துறையில் பணியாற்றிய மேனன் (மோகன்) தீவிரவாதிகளுக்கு உதவி செய்து தேசத்துரோகியாக அறிவிக்கப்படுகிறார். படத்தின் தொடக்கத்தில் கென்யாவில் காந்தியின்  சாட்ஸ் குழு ஒரு மிஷனை நடத்தி முடிக்கிறார்கள். இதில் மேனனின் மகன் உட்பட அவரது குடும்பம் இறந்துவிடுகிறது . உயிர்தப்பும் மேனன் காந்தியை அவரது மகனான இன்னொரு விஜயை  வைத்தே பழிவாங்க நினைக்கிறார். 

தந்தை மகனாக மிரட்டும் விஜய்

படத்தின் முதல் பாதி முழுவதும் ஆக்‌ஷன் காமெடி ஃபேமிலி செண்டிமெண்ட் என செல்லும் கோட் இரண்டாம் பாகத்தில் தந்தை மகன் என இரு விஜய்களின் நடுவிலான மோதலாக தொடர்கிறது

சாதாரணமான ஒரு பழிவாங்கல் ஸ்டோரியை வைத்துக்கொண்டு அதன் நீது ஒரு  ஆக்‌ஷன் மசாலா த்ரில்லருக்கான திரைக்கதை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கமாக வெங்கட் பிரபு தனது படங்களில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை இப்படத்திலும் எடுத்துக்கொண்டு தனக்கே உரிய மாஸான தருணங்களை உருவாக்கியிருக்கிறார்.

வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் அடல்ட் காமெடிகள் விஜய்க்கு நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கின்றன.  

முக்கியமாக பார்வையாளர்களை இயக்குநர் குறைத்து எடைபோடாமல் அதற்கேற்ற வகையில் படத்தை அடுத்தடுத்த கட்டத்தில் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எப்படியான ட்விஸ்ட் என்றாலும் எப்படியும் ஆடியன்ஸ் கண்டுபிடித்து விடுவார்கள் என தெரிந்து  அதை நீண்ட நேரம் ரகசியமாக வைத்து பயனில்லை என்று இயக்குநர் தெளிவாக ட்விஸ்டுகளை தானே ரிவீல் செய்துவிடுகிறார். அதை ஒரு மாஸான தருணமாகவும் மாற்றிவிடுகிறார். அப்பா விஜயின் கதாபாத்திரம் மாஸ் என்றால் மகன் விஜய்க்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு இயல்பை கொடுத்திருக்கிறார்கள். சந்தானம் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ் ராஜ் என விஜய் எல்லா நடிகர்களின் மாடுலேஷனிலும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

படத்தின் ஏ ஐ மூலம் விஜயகாந்த் வரும் காட்சி படத்தின் கதையோடு சேர்ந்து வருவது கேப்டன் விஜயகாந்திற்கு ஸ்பெஷல் ட்ரிபியூடாக அமைந்துள்ளது. இது தவிர்த்து கிசுகிசுக்கப்பட்ட ஒரு சில நடிகர் நடிகைகள் கேமியோ ரோலில் வந்து க்ளைமேக்ஸ் வரை ஹைப் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை காட்சியின் விறுவிறுப்பான தன்மையை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. விசில் போடு பாடலுக்கு நிறைய விமர்சனங்கள் வந்தபின் திரையரங்கத்தில் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பக்கம் சி.எஸ்.கே மேட்ச் இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்தாக அமைந்துள்ளது தி கோட்.

சோஷியல் மீடியா விமர்சனங்களை அடையாளம் கண்டு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பார்வையாளர்கள் முகம் சுளிக்காத வகையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

முதல் பாதியில் எமோஷன் ஒருபக்கம் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் என சரியாக பேலன்ஸ் செய்த இயக்குநர் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் தொய்வை மறைக்க கொஞ்சம் போராடுகிறார். நெகட்டிவ் ரோலில் விஜய் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து ரசிகர்களின் உற்சாகத்தை குறையாமல் வைத்திருக்கிறார். ரஜினி , அஜித் , தோனி , மட்ட பாடலில் குத்தாட்டம் போடும் நடிகை, க்ளைமேக்ஸில் வரும் குழந்தைகளை கவர்ந்த நடிகர் என  அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட்கள் இந்த தொய்வை மறைக்கின்றன. திரையரங்கத்தில் ரசிகர்களுடன் கொண்டாடுவதற்கு ஏற்ற எல்லா பிளஸ் பாயிண்ட்ஸ்களும் படத்தில் இருக்கின்றன.

யுவனின் பின்னணி இசையும் முதல் நாள் கொண்டாட்டத்தின் மேல் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு சின்ன வருத்தம். பிரேம்ஜியின் ஒரு சில காமெடிகள் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியும் அவருக்கு  சில காட்சிகள் மட்டுமே இருப்பது வருத்தம்தான். மீனாக்‌ஷி செளதரி , லைலா , அஜ்மல் , ஒரு சில காட்சிகளோடு பேட்டா வாங்கிக் கொண்டு டாட்டா சொல்லிவிடுகிறார்கள். 

ஹைலைட்ஸ்


லியோ படத்தைப்போல் இப்படத்திலும் டைட்டில் கார்டு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் சொர்க்கமே என்றாலும் பாடல் ரீமிக்ஸ், மெட்ரோவில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் , இறுதியில் வரும் ப்ளூப்பர்ஸ், அவ்வப்போது அரிதாக வரும் க்யூட்டான விஜய் எல்லாம் ரசிகர்களுக்கு போனஸ். 

கார் சேசிங் காட்சிகளிலும் , ஆக்‌ஷன் காட்சிகளிலும் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு கவனமீர்க்கிறது.

மொத்தத்தில் தி கோட் விஜய் என்கிற ஒரு ஐகானை திரையரங்குகளில் சென்று விசிலடித்து கொண்டாடிவிட்டு வருவதற்காக எடுக்கப்பட்ட ஒரு பக்கா கமர்ஷியல் படம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola