கீழடி'- என்ற ஒற்றைச் சொல் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஐந்தாம் கட்ட தொல்லியல் அகழாய்வின் துவக்கத்தில் முதலே கீழடி பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால் தமிழ்நாடு அரசு இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூன்று கட்ட இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றுது. நான்கு, ஐந்து, 6-ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த 6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு நடைபெற்றது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய 7-ம் கட்ட அகழாய்விலும் அதே நான்கு இடங்களிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்விடப் பகுதியாக கருத்தப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 5 அடுக்களுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைக்கப்பெற்றது. கீழடியில் தொடர்ந்து உறை கிணறுகள் கிடைத்துவருகிறது. குறிப்பிட்ட சில உறை கிணறுகள் ஒன்றோடு, ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. தண்ணீர் சேமிப்பு வழித்தடங்கள் உள்ளதா என தொடர்ந்து ஆய்வு நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இந்நிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் நடைபெற்று வரும் நிலையில் வணிகத்திற்கு சான்றாக, வெள்ளி நாணயம் தெப்பட்டுள்ளது. கி.மு., 200 முதல் 600ம் நுாற்றாண்டை இருக்கலாம் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருபுறமும் நிலவு, சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வைகை நதி கரை நகரான கீழடியில் வணிகம் நடந்ததற்கு சான்றாக, ஏற்கனவே ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்ட நிலையல் தற்போது, நாணயம் கிடைத்துள்ளது, தொல்லியல் ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.
கீழடியில் கடந்தாண்டை போல் கொரோனா காலகட்டத்தில் அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. அதனால் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியை செப்டம்பர் மாதம் வரை மட்டும் நடைபெறும் என முடிக்காமல். கூடுதலாக சில மாதங்கள் அகழாய்வு பணி செய்ய கால அவகாசம் கொடுத்து, முழுமையாக நடத்த அனுமதிக்க வேண்டும்” என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொல்லியல் சார்ந்த மற்ற செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -’மீன் செதில் போன்ற பானை ஓடுகள்" : கீழடியைப்போல மாறும் கீரனூர் முதுமக்கள் பொருட்கள் கண்டெடுப்பு..!