செல்லூர் ராஜூ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அரிக்கேன் விளக்கு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


மதுரையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்


மதுரையில் தி.மு.க அரசை கண்டித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளும் தி.மு.க அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வகைகள் தற்போது வரை வழங்காததை கண்டித்தும், மதுரை முனிச்சாலை தினமணி டாக்கி சந்திப்பில் அ.தி.மு.க மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜூ தலைமையில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


- BNS சட்ட பிரிவின் கீழ் முதன்முறையாக பசுமாடு கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு !



 செல்லூர் கே.ராஜூ மேடையில்


 

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவிடன் காதில் விழுந்த சங்கு போல் திமுக அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை, வாலி திரைப்படத்தில் வரும் காமெடியில் தாடி பாலாஜிக்கு உடல் முழுவதும் பிரச்னை என்பது போல் திமுக ஆட்சியில் ஒரு துறை கூட சிறப்பாக செயல்படாமல் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசு கொடுக்கும் ரேசன் அரிசியை கோழிக்கு போட்டால் கூட கோழி வீட்டுபக்கம் வருவதில்லை,  நாய் கூட வாலை நிமிர்தவில்லை. வரிக்குதிரையின் வரியை கூட எண்ணிவிடலாம் ஆனால் திமுக அரசு உயர்த்திய வரிக்கட்டணத்தை என்ன முடியாது. அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். வருகின்ற காலங்களில் திமுக - விற்கு இருண்ட காலம் தான். திமுக ஆட்சியில் ஒரு மாநில தலைவரே கொலை செய்யப்படுகிறார். காவல்துறையை  பார்த்து ரவுடிகள் யாரும் பயப்படுவதில்லை. திமுக பொறுப்பற்ற அரசாக உள்ளது, பட்டம் பெறுவதற்கு 1000 ரூபாய் கொடுப்பதாக வாய் கொழுப்பில் ஆர்.எஸ் பாரதி பேசுகிறார். வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் திமுக விற்கு சுளுகெடுத்து"ஷாக்" கொடுப்பார்கள் என்றார்.