ஆர்.பி.உதயகுமார்


சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள பேட்டியில்..,” திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு கடுமையான மின்வெட்டாலும், மின் கட்டண உயர்வாகும் பெரிதும் பாதிக்கப்படுவதை கடந்த கால வரலாறாக தமிழகம் கொண்டு இருக்கிறது. தற்போது தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் ஆட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் சுமையை குறைக்க அம்மா அவர்கள் 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கி சாதனை படைத்தார்கள். இன்றைக்கு திமுக அரசு சொத்து வரி உயர்வு ,குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு , மின்சார கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என்று வருகிறது. மின் கட்டணம் உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே இன்றைக்கும் மின்வாரியத்தினுடைய நிலை கவலைக்குரியதாக இருப்பதை நாம் பார்க்கிறோம். மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு 65,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை தனியார் நிறுவனம் இருந்து வெளிச்சந்தையில் வாங்குகிற காரணத்தால் தான் இந்த மின் கட்டண உயர்வு இந்த மக்கள் தலைமீது சுமையாக இருக்கிறது.


கண்டன ஆர்ப்பாட்டம்


2024  ஏப்ரல் முதல் ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றை வழங்கப்படவில்லை. ஆகவே மின் கட்டணத்தை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்காதை கண்டித்தும் தமிழக முழுவதும் உள்ள கழக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நாளை 23ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலம் தொகுதி உள்ள கள்ளிக்குடியில் நான்கு வழி சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடும்பம்,குடும்பமாக பங்கேற்க வேண்டும். இந்த அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ள நிலையில்தான் உள்ளது. இது ஆணவத்தின் உச்சமும் உள்ளது. அரசிற்கு புத்தி புகட்ட வீதியில் போராட்டத்தில் இறங்கி அரசு கவனத்திற்கு கொண்டுவர களத்தில் இறங்கி உள்ளோம். நம்மையெல்லாம் ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தி இன்றைக்கு மனித நேயமற்ற ஒரு அரசாக கொடுங்கோல் அரசாக இருக்கிறது. 


இந்த திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.  பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அச்சத்தோடு இருக்கும் கூலிப்படையினர் இன்றைக்கு அச்சமில்லாமல் வெளியே நடமாடுகிறார்கள். வெளியே நடமாடும் மக்களோ அச்சத்துடன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். ஆகவே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் அனைவரும்  பங்கேற்க வேண்டும்” எனக் கூறினார்.


- Madurai ; உசிலம்பட்டியில் நடைபெற்ற கிடா முட்டுப் போட்டி ; அண்டா உள்ளிட்ட சிறப்புப் பரிசு