கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியின் போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாகவும், அயோத்தி சாமியாரின் சர்ச்சை பேச்சு தொடர்பாகவும் கேட்டதற்கு.

"சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் செல்லவிரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. இக்கட்சியில் சாதிமத வேறுபாடுகள் கிடையாது. சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பி போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறையாக நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என கூறினார்.

மேலும் செய்திகள் படிக்க - மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முன்னதாக அவர் கொடுத்த முழு பேட்டியில்,” கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு, திருநெல்வேலியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மணி மண்டபம் அமைத்துக் கொடுத்தார்கள். அம்மாவின் வழியில் எடப்பாடி அவர்கள் அதிமுகவை சாதி, மதம், வேறுபாடு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார். தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக எண்ணி நாட்டிற்காக போராடிய தலைவர்களுக்கு எடப்பாடியார் தொடர்ந்து மறியாதை செய்து வருகிறார்” எனக் கூறினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Udhayanidhi Stalin: ’10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக்கிறேன்’.. அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு

செய்திகள் படிக்க - சிறப்பு சேர் வேண்டாம், பிளாஸ்டிக் சேர் போதும்; அமைச்சர் செயலால் நெகிழ்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம்