சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‘கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்’ என பேசி இருந்தார்.  சனாதனம் குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என உத்திரபிரதேச அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரகாம்ச ஆச்சாரியா என்பவர் அறிவித்ததோடு, அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்திருந்தார். உதயநிதி பேச்சுக்கு தேசிய அளவில் பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அமைச்சருக்கு எதிரான நடவடிக்கைக்கு, தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது.



 


அதே போல் அமைச்சர் உதயநிதி, “ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் கொரோனா ஒழிப்பு போன்று, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினேன். அதனால் அமித்ஷா, நட்டா போன்றவர்களும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். வட இந்திய சாமியார் ஒருவர் எனது தலைக்கு 10 கோடி ரூபாய் வருவதாக கூறியிருக்கிறார். சாமியரிடம் 10 கோடி ரூபாய் ஏது? அவர் டூப்ளிகேட் சாமியாரா? என சந்தேகம் எழுகிறது. 10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன். முன்னதாக, கலைஞர் தலையை சீவ ஒரு கோடி ரூபாய் தருவதாக ஒருவர் கூறினார். அதற்கு கலைஞர் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை சீவ முடியாது என நகைச்சுவையாக குறிப்பிட்டார், என்பது குறிப்பிடதக்கது.


 






இந்த நிலையில் அந்த உத்தரப்பிரதேசச் சேர்ந்த சாமியாருக்கு எதிராக திமுக அதன் கூட்டணி கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் உத்திரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்து தமிழ் புலிகள் கட்சியினரை அப்புறப்படுத்தினர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Udhayanidhi Stalin: ’10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக்கிறேன்’.. அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!