மதுரை மாவட்டத்தில்  விமானநிலையம், உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அதிகளவிற்கு அச்சுறுத்தல் இருக்ககூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்போன் கூட கொண்டுபோக அனுமதி இல்லை. இந்நிலையில் ஆண்டு தோறும் தேசிய பாதுகாப்பு படை குழுவினர் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் அதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களாக  மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 



 

இதனையடுத்து  மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை திறந்தவெளி மைதானத்திலும் இரவில் மதுரை விமான நிலையத்திலும் தேசிய பாதுகாப்பு படையினர் மூலமாக பயங்கரவாத  தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு உள்ள பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகின்ற போது மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்தும், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது, வெடிகுண்டு வெடிக்க வைப்பது, துப்பாக்கி மூலம் சுடுதல் போன்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகையை நிகழ்த்திகாட்டினர்.



 

150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களின் நுழைவாயில் பகுதிகளிலும், கோபுரங்கள் உச்சியிலிருந்தபடியும் ஒத்திகை மேற்கொண்டனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையானது  நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை விடிய விடிய தொடர்ச்சியாக நடைபெற்றது.  தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை முன்னிட்டு  மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினர்.



 

முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், வெடிகுண்டு தடுப்பு பரிசோதனை இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வுமேற்கொண்டனர்.

 

அதே போல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் பயங்கரவாதிகள் கோவிலுக்குள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு கைது செய்வது என்பது தொடர்பாக டம்மி கண்ணீர்  வெடிகுண்டை வெடிக்க வைத்து  பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர், இதனால் ராமேஸ்வரம் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றன.



 

மேலும் கோவிலுக்கு வெளியே இருக்கக்கூடிய மக்களை பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கி முனையில் பணையக் கைதியாக  பிடித்து கோவிலுக்குள் அழைத்துச் செல்வது, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு வெளியில் கொண்டு வந்து விடும் பொழுது கண்ணீர்ப்புகை வெடிகுண்டை வெடிக்க வைத்து புகை மண்டலமாக மாற்றி பிணயக் கைதியை தப்பிக்க வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. 

 



மேலும் இந்த செய்தி தொடர்பான புகைப்படங்கள் காண இங்கே கிளிக் செய்யவும் - மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு படை வீரர்கள் ஒத்திகை !

 

இதனால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகையால் பலத்த சத்தத்துடன் வெடி பொருள் பயன்படுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்  முன்னெச்சரிக்கையாக. இராமேஸ்வரம் திருக்கோவிலில் நான்கு ரத வீதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை அனுமதிக்காமல்  பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டனர்.


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Keezhadi Excavation: கீழடி அகழாய்வு: கொந்தகையில் இரும்பு வாள் கண்டெடுப்பு !