கேரளாவில் மீண்டும்  முழு உடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்குள் வருவோர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில்  கொரோனா வைரஸ் அதிகரிப்பின் எதிரொலியாக கேரள அரசு  மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அம்மாநில அரசு. கொரோனா தொற்றின்  முதல் அலையை எளிதாக  கட்டுப்படுத்திய கேரளா, தற்போது உருவாகி உள்ள 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது .  கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாட்டில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையிலும் கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்றளவும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியே உள்ளது.



தற்போது ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது. எனவே கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.




மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது கேரள மாநில அரசு. மேலும் இறப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. இதனால்  தேனி மாவட்டத்தில் இருக்கும் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி, கம்பம் மெட்டு போடிமெட்டு போன்ற இரு மாநில எல்லை பகுதிகளில் கேரள போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலிருந்து  செல்லும் நபர்கள் கேரளாவிற்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது ஆனால் கேரளாவிலிருந்து சுலபமாக தமிழ் நாட்டிற்குள் வந்துவிடும் சூழல் இருந்தது.




தற்போது தமிழ் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உரிமை கொடுத்துள்ளது. இன்னிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பமெட்டு, போடி, குமுளி போன்ற இரு மாநில எல்லைகளில் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்றிலிருந்து அமலுக்கு வருவதால் இரு மாநில எல்லைபகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.


மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் தேனி இளைஞர்கள்!


பஜ்ஜி பிரியர்களுக்கு பங்கம் வரலாம்... தேனி வாழை ஏற்றுமதியில் பின்னடைவு!