தமிழகத்தில் பல பாரம்பரிய கலைகள் இருந்துவந்தது. தற்போது நவீன கால கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரம்பரிய கலைகள், பாரம்பரியங்கள் என ஒவ்வொன்றும் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கு தன்னார்வலர்கள் இளைஞர்கள் என தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு முயற்சிகளையும் ,பயிற்சிகளையும் கொடுத்து வருகின்றனர் .



இதேபோன்று தேனி மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளை மீட்டு அதற்கு உயிர் கொடுக்கும் விதமாகவும் மாணவர்களுக்கு தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை கற்பிக்கும் விதமாக மையம் வீதி நாடகம் எனும் கலைக் குழுவின் மூலம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் பாரம்பரிய கலைகள் குறித்த பயிற்சி அளித்து வருகின்றனர். மையம் வீதிநாடகம் என்ற அமைப்பின் மூலம் மதுரையில் நிறுவப்பட்டு 1998 ஆம் ஆண்டு இந்த மையம் வீதி நாடகம் எனும் கலை குழு உருவாக்கப்பட்டு மதுரையை மையமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது.



மதுரையை மையமாக கொண்டு இந்த கலைக்குழுவினர் செயல்பட்டாலும் இந்த மையம் வீதி நாடகம் எனும் கலை குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களே பங்கு பெறுகின்றனர். இந்த மையம் வீதி நாடகக் குழுவினர் வீதி நாடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம் ,கும்மியாட்டம், கோலாட்டம் ,சாட்டைகுச்சி ஆட்டம், மற்றும் களியலாட்டம் போன்ற கலைகளை கற்பித்து தருவதுடன் குறிப்பாக மாணவர்களுக்கு இந்த கலைகளின் பாரம்பரியங்கள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர்.



மேலும் இந்த கலைகள் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை கற்றுக் கொடுக்கப்படும் ஒரு பயிற்சி மையமாகவும் இந்த நாடகக் குழு செயல்பட்டு வருகிறது. அரசுகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பள்ளிகள்,கல்லூரிகள் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு கல்வி மூலம் இந்த கலைகளை எடுத்துரைத்து பயிற்சி அளித்து கொண்டுள்ளனர். மனித உரிமைகள்  சார்ந்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நாடக குழுவின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை குறித்து இந்த மையம் நாடகம் மூலம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். கலைகள் அழிந்து வரும் போது அதை பாதுகாக்கவும், பயிற்றுவிக்கவும் பல்வேறு தன்னார்வலர்கள் இருந்து வருவது தான் தமிழக கலைகள் நீடிக்கவும், பாதுகாக்கவும் காரணமாகிறது. 


திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!


வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!