பாலாறும், தேனாறுமா ஒட போகிறது

Continues below advertisement

மதுரை கல்லுப்பட்டி பகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:  முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும் என்று கூறுகிறார், ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கூட கூறியுள்ளது, முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை, முல்லை பெரியார் அணை குறித்து முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை? இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள் அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை, ஆனால் அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள், கருணாநிதிக்கு நாணயத்தை வெளியிட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஒட போகிறது.

தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்?

Continues below advertisement

இன்றைக்கு திமுக இரட்டை வேடம் போட்டது வெட்டவெளிச்சமாக ஆகி உள்ளது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்திய அரசை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறார்கள். என் அப்பாவிற்கு நாணயத்தை வெளியிட அமைச்சர் உள்ளே வாருங்கள், மத்திய அரசே உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறார் ஸ்டாலின், ஆனால் இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நெற்றியில் வைக்கும் நாலனா கூட தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை, இதை கேட்க துப்பு இல்லை. நிதி ஆயோக் கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தையர் பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்றுதான் கலந்து கொண்டுள்ளார். அந்த நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது ஹிந்தி ஒழிக என்று 75 ஆண்டுகள் முழக்கமிட்ட திமுக குரல். இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது, இனி ஹிந்தி ஒழிக என்று திமுக கோஷம் போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள்.  நாணயத்தை மட்டும் வெளியிட அழைக்கவில்லை, ஏனென்றால் தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும். அதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் பாதுகாப்புதுறை அமைச்சரை அழைத்து வந்தார்.

டெல்லியின் சாணக்கியத்தனம்

நூறு ரூபாய் நாணயத்தில் தமிழ் வெல்லும் என்று எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள், ஆனால் ஹிந்தி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு பயன்படுத்த முடியாத 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள் இது செல்லாத காசு தான் ஆகும். 100 ரூபாய் நாணயத்தை மக்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் செல்லாத காசு நூறு ரூபாய் நாணயத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், முதலமைச்சர் விழா நடத்திய நிலைமை தமிழகத்தில் தான் நடைபெற்று உள்ளது, இந்த விழாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற திமுககூட்டணி கட்சி யாரும் கலந்து கொள்ளவில்லை. மெட்ரோ ரயில் திட்டம், வளர்ச்சி நிவாரணம், வறட்சி நிவாரணம் எதற்கும் நிதி ஒதுக்கவில்லை இதை கண்டிக்க வேண்டிய ஸ்டாலின் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார். இதுதான் டெல்லியின் சாணக்கியத்தனம். தனது அப்பா பெயரை சொன்னால் போதும் முதலமைச்சர் சரணடைந்து விடுவார் என தெரிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai crime ; பண மோசடி வழக்கில், உசிலம்பட்டி அ.தி.மு.க., சேர்மன் மகன் கைது செய்யப்பட்டார் !