திண்டுக்கல் அருகே  பாரம்பரிய முறையை பின்பற்றி டிராக்டர் வண்டியில் 1008 சீர்வரிசைகள், பண மாலை,  ஆட்டுக்கிடா என ஊரே திரும்பி பார்க்கும் அளவிற்கு தாய்மாமன் சீர் பெரிதா ? அத்தை மகன் சீர் பெரிதா என போட்டி போட்டு சீர்வரிசைகளை குவித்த காதணி  திருவிழா!




திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாடிக்கொம்பு பகுதியை  சேர்ந்தவர் சபரி பாண்டி, சர்மிளா இவர்களது மகன் சித்தேஷ் இவருடைய காதணி விழா பெரியோர்களால் நிச்சயக்க பட்டு தாடிக்கொம்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காதணி விழாவிற்கு தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி, மற்றும் பண்டையகால வழக்கப்படியும்,  


இவர்தான் 50வது! தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் - யார் இவர்?


விவசாயிகளின் உற்றத் துனைவனாக இருக்கக்கூடிய டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பல வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டு சாமான்கள் பத்துக்கும் மேற்பட்ட தாய்மாமனின் சீதனமான ஆட்டு கிடா  என 1008 சீர் வரிசைகளைக் கொண்டு வானவேடிக்கைகளுடன் சீர்வரிசைகளை திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.




அதேசமயம். தாய்மாமன் சீருக்கு இளைத்தவர்கள் அத்தை மகன்கள் அல்ல என அவர்களும் தப்பாட்டம், ஆட்டுக்கிடா,  சீர்வரிசைகள், வானவேடிக்கைகள்  என பதிலுக்கு அவர்களும் சீர் கொண்டு வந்தனர். இதனால் தாடிக்கொம்பு கிராமமே தாய்மாமனின் உறவை மேம்படுத்தும் விதமாகவும், அத்தை மகன்களின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும்  போட்டி போட்டுக் கொண்டு சீர்வரிசைகளை கொண்டு சென்றதை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.


கொல்கத்தா மருத்துவர் வழக்கு : தஞ்சையில் மருத்துவ மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்


விழாவின் நாயகன் சித்தேஷ் தாய் மாமன்களின் பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சூடப்படவில்லை. மாலைகளால் குளிக்க வைக்கப்பட்டார்.


Mohanlal Health: மருத்துவமனையில் மோகன்லால்! மெகா ஸ்டார் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?


அவர்கள் கூறுகையில் வரும் நாகரீக காலங்களில் வீட்டு  விசேஷங்கள் என்பது குறிப்பிட்ட நபர்களை அழைத்து காதும் காதும் வைத்தது போல் நடைபெறக்கூடிய சடங்கு சம்பிரதாயமாக மாறி வரக்கூடிய சூழ்நிலையில் நம் முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய தாய்மாமன் சீர்வரிசை என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.




இதனால் தாய்மாமன் சீர்வரிசை  முன்பு எப்படி நடைபெற்றது என்பதை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும். புதிய கலாச்சாரங்கள் பழைய வழிமுறைகளை மறந்துவிடக்கூடாது அவர்களும் நம்மைப் பார்த்து பழங்கால வழிமுறைகள் அழிந்து விடாமல் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தக் காதணி திருவிழாவானது நடைபெற்றது என்று கூறினர்.