லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை பயன்படுத்தி 24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி பாதிப்புள்ள செயல்படாத சிறுநீரகத்தை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
அவசரநிலை அறுவை சிகிச்சை
திருநெல்வேலி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, 22 வாரங்கள் கருவை தாங்கியிருந்த 24 வயதான பெண்ணுக்கு மிக நுட்பமான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. அத்துடன் ஒரு பெரிய சிறுநீரக நீர்க்கோவை கட்டியிருந்த செயல்படாத வலது சீறுநீரகமும் இச்செயல்முறையில் அகற்றப்பட்டது. கருவகத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை வளர்ச்சி கண்டுவரும் நீர்க்கட்டியை ஏற்படுத்தி வருவதால் ஒரு அவசரநிலை சிகிச்சையாக இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றால், பிரசவத்தின்போது தாய்க்கு உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அது வழிவகுத்திருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரகம் அகற்றல்
கல்லிகுளத்தைச் சேர்ந்த சிஹானா ஷேக் என்ற பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக கருத்தரித்தார் மற்றும் இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் வாரத்தில் பிரசவம் நிகழுமென கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 22 வாரங்கள் கர்ப்பநிலையில் கடுமையான அடிவயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனை, அடிவயிற்றின் வலதுபக்கத்தில் ஒரு பெரிய நீர்க்கட்டி இருப்பதை வெளிப்படுத்தியது. எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனையும் இதை உறுதிசெய்தது. நோயறிதலுக்கான லேப்ராஸ்கோபி செய்யப்பட்டபோது, சிறுநீரக நீர்க்கோவை கட்டி பெரியளவில் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இந்த நீர்க்கட்டியினால் குழந்தைக்கும், தாய்க்கும் அதிக சிக்கல்கள் வரும் வாய்ப்பிருந்தது. கருவகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி குழந்தையின் வளர்ச்சியை இது தடைசெய்துவிடும் என்பதால் அவசரநிலை சிகிச்சையாக லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரக அகற்றல் சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டது.
சிறுநீரகத்துடன் நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சை
இதுதொடர்பாக, டாக்டர். அந்தோணி ராஜ் கூறியதாவது: கருவுற்ற பெண்களில் பெரியளவிலான சிறுநீரக நீர்க்கோவை கட்டியுடன் கூடிய சிறுநீரகம் காணப்படுவது அரிதானது. கருவுற்ற பெண்களில் சுமார் 5% நபர்களிடமே இது உருவாகிறது. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துடன் இந்த நீர்க்கட்டியை அகற்றுவது உடனடியாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும், கருவகத்தில் வளரும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது, இந்த அறுவைசிகிச்சை அதிக சவாலானதாக இருக்கக்கூடும். லேப்ராஸ்கோபி செயல்முறைகளில் எமது நிபுணத்துவம், மேம்பட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்நிலை தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக எமது மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சையை எங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தது.
லேப்ராஸ்கோபி முறை
லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சையில் 22 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் எமது மருத்துவமனை, குறைந்த ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகளை சிக்கலின்றி நேரடியாக மேற்கொள்வதில் முன்னணி மையமாக இருந்து வருகிறது. 15,000-க்கும் அதிகமான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில் லேப்ராஸ்கோபி முறையிலிருந்து திறந்தநிலை அறுவை சிகிச்சைக்கு மாறுகிற விகிதம் என்பது 1%-க்கும் குறைவாக இருப்பது எமது நிபுணத்துவம் மற்றும் சிகிச்சை செயல்முறையின் துல்லியத்தை வெளிப்படுத்துகிறது என பெருமையுடன் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?