மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.


மேலும் படிக்க: Boris Johnson Rishi sunak: பதவி விலகிய போரிஸ் ஜான்சன்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்தான் அடுத்த பிரதமரா?




Manju Warrier : மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு.. காரணம் இதுதான்..


இந்த நிலையில் அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமானது மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு வணிகவரித்துறை அமைச்சர் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்,


 






மேலும் இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் தரப்பில் இந்த ஒப்பந்த புள்ளியானது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆண்டுகளில் தொடங்க வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க: EPS Condemn : காமராஜ் வீட்டில் சோதனை: பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுங்க - கொந்தளிக்கும் எடப்பாடி