அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் மற்றும் அவரது சம்பந்தி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில்
அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.58 கோடியை அபேஸ் செய்த முன்னாள் அமைச்சர்: எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
மேலும் படிக்க : DVAC Raid : மகன்களோடு வசமாக சிக்கிய காமராஜ்: யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு? முழு விபரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்