திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே வாமசுந்தரி இன்ஸ்வெஸ்மெண்ட் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலான பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் பிப் 16-ஆம் தேதி கிழக்கு கோபுரம் திருப்பணிகள் பால்யம் பூஜை நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கு பாலாலயம் பூஜை நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது.


PTR Clarifies : ஆடியோவில் உள்ள குரல் யாருடையது..? தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.




அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் மகா மண்டபத்தில் கும்பங்கள் வைக்கப்பட்டு கர்ஹரி பூஜை, சங்கு பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் விமான தலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திருவனந்தபுரம் முட்டவிலா மடம் பிரம்ம ஸ்ரீ சுப்பிரமணியரு தந்திரி தலைமையில் ராஜகோபுரத்திற்கு ஆவாகனம் செய்யப்பட்டு பாலாலயம் பூஜை நடந்தது.


PTR on Savukku: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகள் பைத்தியக்காரத்தனமானது - நிதியமைச்சர் பதிலடி




இந்நிகழ்ச்சிக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.பின்னர் ஆவாகனம் செய்யப்பட்ட கும்பங்களிலிருந்த புனித நீரால் மூலவர் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ராஜகோபுரம் கீழ்பகுதியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பந்தல்கால் நடப்பட்டது.


CM letter : சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ”ஆபரேஷன் காவேரி” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்




நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, அறங்காவலர்கள் கணேசன், செந்தில்முருகன், துணை ஆணையர்கள் வெங்கடேஷ், சங்கர்,திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, தாசில்தார் சுவாமிநாதன்,  மண்டல செயற்பொறியாளர் ஆறுமுகம், திருச்செந்தூர் கோவில் செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன்,  திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வாள்சுடலை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண