சிவகங்கை - மேல கொன்னகுளம் மற்றும் மானாமதுரை - சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே ஜூலை மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு 80 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காரைக்குடி: வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே ஆட்டையப் போட்டு மூட்டயகட்டிய திருடர்கள் - ஜன்னல் வழியே 40 பவுன், 50 ஆயிரம் கொள்ளை !
மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஜூலை 11 முதல் ஜூலை 27 வரை ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்