கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி கிராமத்திலிருந்து அரசன் கொடை செல்லக்கூடிய பகுதியில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து நள்ளிரவு நடைபெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Actress Meena: 'ஆளே மொத்தமா மாறிட்டாங்க’ ... நடிகை மீனாவின் புது வீடியோவை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், செந்தில்குமார், அபிராமன், ஈஸ்வரன், சின்னையா, சரத்குமார், சேகர், நாகராஜன், கரியம்மாள் ஆகிய 9 பேர் தாண்டிக்குடி பகுதியில் இருந்து ஜீப் மூலமாக அரசன் கொடை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு   விவசாய பொருட்களை  இறக்கி வைத்துவிட்டு திரும்பும் வேலையில் சுமார் 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அபிராமன் என்பவர் உயிரிழந்தார்.



தகவலறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .


Weight Loss : இப்போ இதுவும் ட்ரெண்ட்.. வெயிட் லாஸுக்கு ஸ்டெப் ஸ்டெப்பா சூரிய நமஸ்காரம் .. இதையும் படிங்க..


விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை கரடு முரடான சாலையாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது .




தொடர்ந்து இந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் . மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .




அய்யலூர் அருகே பெண் ஒருவர் மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு கோவிலூர் குஜிலியம்பாறை பாளையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து மதுபான விற்பனை செய்வதாக தொடர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.




இந்த நிலையில் அய்யலூர் அருகே துமிச்சிக் குளம் பகுதியில் பெண் ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.