பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
இலங்கைக்கு அதிவேக தாக்குதல் கப்பல் அனுப்பிய இந்தியா.. சீனாவுக்கு பக்கா செக்..!
தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.
Ayodhya Ram Mandir : "ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள மாட்டோம்" காங்கிரஸ் அறிவிப்பு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்புகள் அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
AFEELA electric car: இது என்ன கார்-ஆ? இல்ல ரோபோ 2.0- ஆ? அசத்தல் அப்டேட்டில் கலக்கும் ஹோண்டா - சோனி!
கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால், ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர்" என்றார்.