திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதி அருகே உள்ள சில்வார்பட்டியை சோ்ந்தவர் பொன்னுச்சாமி (34). அவருடைய 1½ வயது குழந்தையான சாதனா கடந்த 10-ந் தேதி காலை பொன்னுச்சாமி, தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (45) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


Naga Chaitanya : நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. சமந்தாவின் முன்னாள் கணவர் குறித்து உண்மையை உடைத்த கீர்த்தி




இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுச்சாமியும், சாதனாவும் கீழே விழுந்தனர். அப்போது குழந்தை சாதனா மட்டும் காரின் சக்கரத்தில் சிக்கி பலியானது. ஆனால் பொன்னுச்சாமி காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Srilankan Crisis : இலங்கையில் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் ? மக்களின் கோரிக்கைகள்தான் என்ன?




மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பொன்னுச்சாமி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும், காரை ஓட்டி வந்த ராஜேந்திரனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் அவர் என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்யும் நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தங்களை வேண்டுமென்றே காரை மோதச் செய்தார்.


Gotapaya To Maldives : மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச...நடந்தது என்ன?




இதில் எனது குழந்தை பலியாகிவிட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த விபத்து வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் இதில் தலைமறைவான ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.