தென்மண்டல ஜி.ஜியாக அஸ்ராகார்க் பொறுப்பேற்ற நிலையில் மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 



 

 



 

முதற்கட்டமாக தென்மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளின் 1,238 வங்கி கணக்குகளையும்,  பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர் நடவடிக்கையாக மதுரை மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் கோரிப்பாளையம் ஜாம்புரோபுரத்தில் 1.250 கஞ்சாவுடன் அப்பகுதியை சேர்ந்த கிஷோர் 20, தெற்குவாசல் மணிகண்டன் 19, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்.

 



 

 


 

மேலும் அவர்களது சொத்துக்களை முடக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைத்தும் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மதுரையை தொடர்ந்து கஞ்சா விற்பனை தடுக்க தமிழகம் முழுவதிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண