நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை வரவழைக்க உண்ணாவிரத போராட்டத்திற்கு நகர் மன்ற உறுப்பினர்களே, போராட நாங்க ரெடி. நீங்கள் ரெடியா? என நகர்மன்ற தலைவரை அழைத்த உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர்.


Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..




முதல்வர் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம்:


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் நகர் மன்ற மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட  அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 57 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு தீர்மானம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பெரியகுளம் நகராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினர் பால்பாண்டி பேசுகையில், பெரியகுளம் நகராட்சியின் பேருந்து நிலையத்தை ஒரு கோடியே 28 லட்ச ரூபாய்க்கு மறு சீரமைப்பு பணிகள் முடிவற்று  தமிழக முதல்வரால்  காணொளி காட்சி மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.


Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்




பேருந்து நிலையம் இல்லாததால் மக்கள் அவதி


இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பகல் நேரங்களில் பெரும்பாலான திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் என 70 சதவீதம் பேருந்துகள் வராத நிலையில்  பேருந்து நிலையத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் பெரும் பாதிக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளையும், வரவழைக்க ஏன் முடியவில்லை என கேள்வி கேட்டதோடு,  பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வரவழைப்பதற்கு போக்குவரத்துதுறை மற்றும் முதலமைச்சர் வரை புகார் அனுப்ப வேண்டுமா?


Lok Sabha Election 2024: காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவி..! புதிய அதிகாரிகள் யார் யார்..? வெளியான அறிவிப்பு!




வார்டு உறுப்பினர்கள் போராட்டம் அறிவிப்பு:


என்பதோடு  நகர் மன்ற உறுப்பினர்கள் இதற்காக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனவும்  உண்ணாவிரதம் போராட்டம் நடத்த நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா? எனவும் தேதியை குறியுங்கள் நகர் மன்ற தலைவர் உட்பட அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கேள்வி எழுப்பினார். மேலும் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராதது குறித்து தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.