பெரியகுளம் அம்மா உணவகத்தில் உள்ள சமையல் பொருட்களை அங்கு பணி புரியும் ஊழியர்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


அம்மா உணவகம்:


தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலிதாவால் ஏழை எளிய பொதுமக்கள் பயன்படும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு தற்போது வரையில் செயல்பட்டு வருகிறது .


ரேஸில் முந்துவார்களா அசோக் கெலாட், சச்சின் பைலட்? வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் - பரபரக்கும் ராஜஸ்தான்




வெளிநபர்களுக்கு விற்பனையா?


அம்மா உணவகம் திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையில் பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் பயன்படும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவம் செயல்பட்டு வருகிறது. இதில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகமும் உள்ளது.   நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக சமையல் செய்து குறைந்த விலையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.


Madonna Sebastian Photos : லியோவின் தங்கச்சி எலிசா..ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!


இந்நிலையில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழுவினர் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் சமையல் பொருட்களை அங்கிருந்து வெளிநபருக்கு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் இருசக்கர வாகனத்தில் சமையல் பொருட்களை ஏற்றி செல்லும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.




Omni Buses: அதிக கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பேருந்துகள்.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!


மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா உணவகத்தில் தொடர்ந்து தரம் இல்லாத உணவு வழங்குவதாகவும் அங்குள்ள பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழும்பி வரும் நிலையில், இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே உணவகத்தில் இருந்து அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.