மதுரை  வில்லாபுரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 22  என்பவருடன் பழகி வந்துள்ளார்‌. இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று சந்தோசமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. 


 






இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து  மகளிடம் விசாரணை மேற்கொண்டத்தில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். 




இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - செங்கலை காட்டி வாக்கு சேகரித்த திமுக தற்போது எய்ம்ஸ்க்கு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்


எனவே இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியுள்ளதாக புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரையில் இன்ஸ்டாகிராம்  மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக  காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்கடி கவனிக்க வேண்டும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகளின் பெற்றோர் மருத்துவர் ஆலோசனைப் படி குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என  மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர