தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! விவரம்!
அணையின் நீர்மட்டம் கடந்த 4-ந் தேதி 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,406 கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக அதிகரித்தது. அதாவது 5 நாட்களில் 1 அடி வரை உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,143 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1867 கன அடியாகவும் உள்ளது. இதற்கிடையே தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தஞ்சையில் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
மஞ்சலார் அணை: நீர்மட்டம் - 55.00 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 300 கன அடி , நீர் திறப்பு– 0
சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 126.34(126.28 அடி) , நீர் இருப்பு – 100 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 24 கனஅடி, நீர் திறப்பு –03 கனஅடி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்