திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்னும் சில தினங்களில் கந்த சஷ்டி திருவிழா பழனியில் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.




திருக்கோவில் உதவியாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து பழனி திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் இருந்து வந்த பழனி அடிவாரம் போலீசார் போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!




இதனை அடுத்து திருக்கோவில் உதவியாளர் லட்சுமியுடன் வியாபாரிகளுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் விமலபாண்டியன் மற்றும் தீனதயாளன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதை நீங்கள் தடுக்கக்கூடாது என்றும் தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பொழுது, உங்களது பெயரை சொல்ல நேரிடும் என கவுன்சிலர்களை எச்சரித்தார்.


ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!


இதனை எடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் திருக்கோவில் சார்பில் வணிக நோக்கத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டதே சட்டப்படி தவறு என்றும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்வதாகவும், அதற்கு நேர அவகாசம் தர வேண்டும் என கேட்டதை அடுத்து இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்து, அதற்குள் ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றிக்கொள்ள வேண்டுமெனவும் உதவி ஆணையர் லட்சுமி தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண