திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட  தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பழனி மலைக்கோவிலில் பணிபுரியும்  தூய்மை பணியாளர்கள் பழனி அடிவாரம் தண்டபாணி நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். 


Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா அரசிதழில் வெளியீடு..இனி தடையை மீறினால் சிறை




அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, பழனி மலைக்கோவிலில்  ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். தனியார் நிறுவனத்தின் சார்பில் பழனி மலைக் கோவில் திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பட பழனி கோவிலுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் சுமார் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிவதாகவும், நாள் கூலி அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பணி மற்றும் வருங்கால வைப்புநிதி ஆகியவை என பிடித்தம் போக 2500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்தனர்.


Sabarimala : சித்திரை விஷூ: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு.. சிறப்பு பூஜை என்னென்ன..?




எனவே சம்பளத்தை உயர்த்தவும், சம்பளம் பட்டுவாடாவை முறைப்படுத்தி கண்காணிக்கவும், இறந்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனியார் நிறுவன அதிகாரிகளிடம்  பலமுறை சொல்லியும், நடவடிக்கை இல்லை. எனவே இன்று அதிகாலை முதல் பழனி கோவில் தூய்மை பணிகளை புறக்கணித்து,  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.


Minister Kayalvizhi Selvaraj: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி.. விவரம் உள்ளே..!




Mohanlal car: கோடிகளை கொட்டி மோகன்லால் வாங்கிய புதிய சொகுசு கார்.. அம்மாடியோவ் இத்தனை வசதிகளா..!


இதையடுத்து தனியார் நிறுவன அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற மே 1ம்தேதி முதல் ஊதிய உயர்வு தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்து சென்றனர். மலைக்கோவில் துப்புரவுப் பணியாளர்களின் திடீர் போராட்டத்தால் பழனி மலைக்கோவில் மற்றும் உபகோவில்களில் அதிகாலை முதல் துப்புரவு பணிகள் எதுவும் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண