ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார். 


ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிக்கு காய்ச்சல். அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் நேற்று முதல்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் இல்லை எனவும், சாதாரண காய்ச்சல் தான் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. 


தொடர்ந்து, அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. 


யார் இந்த கயல்விழி செல்வராஜ்? 


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ், எம்.காம்., பி.எட் படித்தவர். 


இவர் கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை திமுக மகளிரணியில் உறுப்பினராக இருந்தவர். 


இவரது கணவர் கே.செல்வராஹ் பி.ஏ., பி.எல்., முடித்து வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எஸ்.திலீபன் மற்றும் எஸ்.கே. உதயசூரியன் மகன்கள் உள்ளனர்.