பழனி அருகே பொருந்தலாறு அணை பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனியார் தோட்டத்தில் புகுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்




திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பொருந்தலாறு அணைப்பகுதியில் இருந்து பத்திற்கு மேற்பட்ட காட்டு யானைகள் இரவு நேரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் புகுந்து மா , தென்னை, மக்காச்சோளம் பயிர்களை நாசம் செய்த சம்பவம் தோட்டத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிவுள்ளது.


DMK - Congress Alliance: 9 இல்லை, 15 தொகுதிகள் வேண்டும்: காங்கிரஸ்க்கு காது கொடுக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை




 


Morning Headlines: திமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை.. நிதிஷ் எடுக்கப்போகும் முடிவு.. இன்றைய முக்கிய செய்திகள்!


இதுகுறித்து  விவசாயிகள் பழனி வனத்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை சேதப்படுத்திய செய்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானைகள் உலாவும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.