அதிகாரம் அரசியலிடம் உள்ளது என நினைக்கிறார்கள்.ஆனால் அது மக்களிடம் தான் உள்ளது தேர்தலில் ஓட்டு சீட்டாக உள்ளது- மதுரையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் 72 ஆவது நாடார் மஹாஜன சங்க சார்பாக இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில், "இரண்டு மாநிலங்களில் கொடியேற்றி விட்டு இரண்டு முதல்வருக்கு மாளிகையில் விருந்து அளித்த ஒரே ஆளுநர். சிலர் அழைப்புகளை மறுத்து விடுவதை பெருமையாக கொள்கின்றனர். இந்தியாவிலேயே இளைய வயது ஆளுநர் நான்தான் சமீபத்தில் பிரிக்கப்பட்ட குழந்தை போல் இருக்கும் தெலங்கானாவை இந்த ஆளுநர் எப்படி கையாள்வார்கள் என விமர்சனங்கள் எழுந்தது.
நான் டாக்டர் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என எனக்கு தெரியும். தெலுங்கானா இப்போதுதான் பிறந்த குழந்தை அதனை கையாள எனக்கு நன்றாக தெரியும் என கூறினேன். அதிகாரம் அரசியலிடம் உள்ளது என நினைக்கிறார்கள் ஆனால் அது மக்களிடம் தான் உள்ளது தேர்தலில் ஓட்டு சீட்டாக உள்ளது. ஒரு டாக்டர் ஒரு குழந்தையை பிறந்தாலும், இரட்டை குழந்தை பிறந்தாலும் கையால முடியும் அதேபோல் இரண்டு மாநிலங்களை கையாண்டு வருகிறேன். காமராஜர் முதல்வராக இருந்த போது ஏற்படுத்திய ரெக்கார்டை எந்த முதல்வரும் பிரேக் செய்யவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் போது காமராஜர் இருந்திருந்தால் பாராட்டி இருப்பார். எனக்கு இரண்டு பூ பிடிக்கும் தலையில் வைப்பதற்கு மல்லிகை பூவும், மற்றொன்று தாமரை பூவும் பிடிக்கும். தாமரை தேசி மலர் என்பதனால் எனக்கு பிடிக்கும்" என கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - DMK MLA Son Arrest issue: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றவாளிகளுக்கு பிணை கொடுக்கக்கூடாது- எவிடென்ஸ் கதிர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Odisha Road Accident: ஒடிசாவில் நேர்ந்த பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சிகள் - தூக்கி வீசப்பட்ட நபர்கள்