பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க மேம்படுத்த அரசு பெருந்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.


INSAT 3DS: விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்... இதனால் என்ன பயன்?




பழனி கோயிலில் வின்ஸ் நிலையம் புகார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், இடும்பன் குளத்தில் புதிய முடி கொட்டகை மண்டபம்,  பஞ்சாமிர்த விற்பனை நிலைய கட்டிடம், இடும்பன் மலைக்கோயில் பராமரிப்பு பணி, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் அலங்கார வளைவு என 12 பணிகள் 99.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டத்திற்குரிய வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பணிகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.




Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..


மலையடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.6.83 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், ஆய்வகம், நூலகம் கட்டுவதற்கான பணியையும் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, ராஜசேகர், மணிமாறன், பழனி கோயில் இணை ஆணையர் பாரதி, உதவியாளர் லட்சுமி மற்றும் கோயில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், “பழனி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப் கார் திட்டம் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டபோது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே ரோப் கார் திட்டத்தை கைவிட்டு புதிதாக திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்” எனக் கூறினார். மேலும் பழனி கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படவில்லை என பதில் அளித்தார்.