மதுரையில் துவங்கிய திட்டம்

 

தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து கிராம ஊராட்­சி­க­ளுக்­கும் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்கும் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். தி.மு.கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர், இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்டு துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் விளை­யாட்டு துறை­யில் பல்­வேறு புது­மை­களை மேற்­கொண்டு வரு­கி­றார். கிரா­மத்து இளை­ஞர்­கள் விளை­யாட்டு துறை­யில் பெரும் பங்­கேற்க வேண்­டும் என்ற சீரிய நோக்­கத்­தில், தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து கிராமஊராட்­சி­க­ளுக்­கும் விளை­யாட்டு சம்­பந்­த­மான விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்க திட்­ட­மிட்டு கலை­ஞர் நூற்­றாண்டு விழா­வினை சிறப்­பிக்­கும் வகை­யில் 2022-2023 சட்­டப்­பே­ர­வை­யில் விளை­யாட்­டுத்­துறை சார்­பாக தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து கிராம ஊராட்­சி­க­ளுக்­கும் கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­டும் என அறி­வித்­தி­ருந்­தார்.



 

 

விளையாட்டு உபகரணங்கள்

அதன்­படி  மதுரை திருப்­பா­லை­யில் உள்ள யாதவா பெண்­கள் கல்­லூ­ரி­யில் நடைபெற்ற விழா­வில் இத்­திட்­டத்­தினை துவங்கி வைத்தார். நமது கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டின் மீது அதீத ஆர்வம் உடையவர்கள் ஆவர். இவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்வர். இது தனிமனித வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களிடம் தேவையான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை .ஊரக இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திய கலைஞர் முகருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன்விழா ஆண்டான 2023 மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நேரம் மற்றும் சக்தியினை ஒருமுகப்படுத்தி அவர்களை விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் கிராமப்புற இளைஞர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் "டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்" கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் ரூ.86 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் படி  33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 'கலைஞர் கிட்' 420 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார். 



 

ஒவ்வொரு கிட்டிலும்100 டி-ஷர்ட், 200 தொப்பிகள் உள்பட 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கி உள்ளன. 

 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

 

அனைத்து சமுதாயத்திற்கும் முக்கியமானது விளையாட்டுத்துறையில் முன்னேறுவது ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும் அந்த அடிப்படையில் இந்த துறைக்கு கூடுதல் வேகத்தை தரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்கினார். அதன் படி திட்டங்களை தீட்டி பரிசு உபகரணங்கள் போட்டிகள் எல்லா வகையிலும் தமிழ்நாடு அடையாளம் வளர்ச்சி அடைவதற்கு சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறை ஒரு பொழுதுபோக்குக்காக முக்கியமில்லை மாணவர்கள் கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ விளையாட்டு துறையில் விளையாட்டுகள் தோல்வியும் வெற்றியும் எப்படி அணுகுவது அதைத் தாண்டி எப்படி முன்னேறுவது இல்லை அதை எப்படி சமாளிக்கிறது என்றெல்லாம் கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல வாய்ப்பாக இருக்கும். எனவே இதுவரைக்கும் தமிழ்நாட்டில் எந்த அளவிலும் பார்த்தாலும் செய்யாத அளவுக்கு  சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நான் பெரிய வாழ்த்தை தெரிவித்து இன்னும் இந்த பணி சிறப்பிக்கட்டும் பல நன்மை அடையட்டும் என்றார்.



 

விழாவில் அமைச்சர் மூர்த்தி பேச்சு

 

திமுக ஆட்சியில் தான் கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் நலத்திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கிறார் உதயநிதி. உதயநிதி வந்த பின்பு தான் விளையாட்டுத்துறை வளர்ச்சி, எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தக்கூடியவர் உதயநிதிதான். கட்சிக்காக உழைத்தவர்களையும், இளைஞர்களையும் அங்கீகரித்தவர் உதயநிதி. எனக்கு அமைச்சர் பதவி பெற்றுக்கொடுத்தவர் உதயநிதி. அதை எந்நாளும் மறக்க மாட்டேன் என்றார்.



 

விழாவில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் அற்புதமான திட்டம். மதுரையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். விளையாட்டுத்துறை திட்டங்கள் தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை பரந்து விரிந்திருக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் பெருமை அடைகிறோம். தமிழகத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகள் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைய வேண்டும். கலைஞர் பெயரால் முதல்முறையாக ஒரு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கலைஞர் சிறுவயதில் களத்தில் இறங்கி விளையாடிவர். கலைஞர் ஆர்வமிக்க ஒரு விளையாட்டு ரசிகர். ஒரு விளையாட்டு வீரனுக்கு உண்டான அனைத்து திறமைகளையும், கோணங்களையும் கொண்டவர் தான் கருணாநிதி. கலைஞரின் எனர்ஜி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தேவை. அப்போது தான் ஒவ்வொரு வீரனும் வெற்றியடைய முடியும். கலைஞரை போல டீம் ஓர்க் யாராலும் செய்ய முடியாது. ஒரு சிறப்பான டீமை வைத்திருந்தார். வழிநடத்தினார்.

 

கலைஞருக்கு பிறகு தற்போது முதல்வர் ஸ்டாலின் நல்ல டீமை வழிநடத்திக்கொண்டுள்ளார். நல்ல டீம் இருந்தால் எல்லாமே வெற்றி தான். 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது. தமிழகம் விளையாட்டில் சிறந்த மாநிலம் என விருதுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் அமைச்சர் மூர்த்தி 1360 குழுக்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தார். நான் அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை கொடுக்கிறேன் என்றார்.