டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

Continues below advertisement

டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்டதில் 8 பெட்டிகள் விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது. 

இந்தியாவில் அடிக்கடி இது போன்ற ரயில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இந்த விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.