பழனி முருகன் கோயிலில் வருகின்ற 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம் , வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு அறையில் வைத்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சில நாட்களாக கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இதனை தடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை எடுத்து  பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிடித்திருந்ததை அடுத்து கோவில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  


Vijay Antony Video: படிப்பு வேற.. அறிவு வேற; குழந்தைகளுக்கு நெருக்கடி தராதீங்க.. விஜய் ஆண்டனியின் பழைய வீடியோ..




வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி அன்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. எனவே பக்தர்கள் 1 10 2023-ம் தேதி முதல் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும்  வீடியோ, சாதனங்களை திருக்கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  தவறி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை திருக்கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை,மின் இழுவை ரயில்  மற்றும் ரோப்கார்  நிலையங்களில் ஏற்படுத்தபட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லுமாறும், தரிசனம் முடிந்து பின்னர் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Virat Kohli : ஃபிட்டாக இருக்கும் விராட் கோலிக்கு ரெஸ்ட் ஏன்..? பிசிசிஐ இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!