ஆசியக் கோப்பை 2023 வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பை மனதில் வைத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எங்கே கோலி முறியடித்துவிடுவார் என்ற பயத்தில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியாத வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ரசிகர் X (முன்னதாக ட்விட்டர்) இல் எழுதியதாவது, “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சதத்தை காப்பாற்ற பிசிசிஐயும், மும்பை குழுவினர் தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா..? 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விராட் கோலி தற்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக 77 சதங்களை அடித்து நெருங்கி வருகிறார். தற்போது சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். 2023ல் கோஹ்லி இதுவரை 5 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இப்படி இருக்கும் ஒருவரை எவ்வாறு அவ்வப்போது ஓய்வு கொடுத்து அமர வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுகிறது.

இதுவரை விராட் கோலி காயம் காரணமாக எந்தவொரு போட்டியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை நாம் கேட்டது கிடையாது. அந்த அளவிற்கு தீவிரமாக தனது உடல்நிலையில் கவனம் செலுத்துவார். இப்படி, ஃபிட்டாக இருக்கும் விராட் கோலியை அடுத்தடுத்த போட்டிகளில் ரெஸ்ட் கொடுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

வடிவம் மொத்த போட்டிகள் இன்னிங்ஸ் மொத்த ரன்கள்

அதிகப்பட்ச

ஸ்கோர்

சராசரி சதம் அரை சதம்
டெஸ்ட் 111 187 8676 254 49.3 29 29
ஒருநாள் 280 268 13027 183 57.39 47 65
டி20 115 107 4008 122 52.74 1 37
ஐ.பி.எல் 237 229 7263 113 37.25 7 50

கடந்த ஆண்டு எத்தனை முறை ஓய்வு..? 

கடந்த 2022ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஆசியக் கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியிலும் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ரோஹித் சர்மா இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் 24 வெற்றிகள், 8 தோல்விகள் மற்றும் ஒரு போட்டி முடிவு இல்லாமல் இந்திய அணிடை வழிநடத்தியுள்ளார். இருப்பினும், முழுநேர கேப்டனாக ஆனபோதிலும் ரோஹித் சர்மா 23 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, செப்டம்பர் 30 மற்றும் நவம்பர் 3 ஆம் தேதிகளில் இங்கிலாந்து (கௌஹாத்தியில்) மற்றும் நெதர்லாந்திற்கு (திருவனந்தபுரத்தில்) எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.