பழனி அருகே 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆடிய கும்மி ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  அழிந்து வரும் பாரம்பரிய கிராமியக் கலையான கும்மி ஆட்டத்தை மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 


CM Stalin On ED Raid: ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை.. பயமுறுத்த பாக்றாங்க, பலிக்காது - பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்




பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர்  கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு கும்மி ஆட்டம் கும்மியாட்டம் பயிற்சி அளித்து வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீ பவன் கலைக்குழுவின் சார்பில் கும்மி நடனம் அரங்கேற்றம் நிகழ்ச்சி சின்னகலையம்புத்தூரில்  நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர். இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடியும், மேளஇசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான ஆடை அணிந்து கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Ponmudi ED Raid: அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கவுண்டவுன் தொடங்கியது - தலைவர்கள் கண்டனம்..!




கிராமங்களில் பாரம்பரியமாக ஆடப்படும் கும்மி ஆட்டம் தற்போது மெல்ல மறைந்து வந்த நிலையில் மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கிராமம் தோறும் சென்று மக்களை ஒன்றிணைத்து கும்மி பாடல்கள், கும்மி ஆட்டத்தை கற்றுக் கொடுக்கும் இளைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.  கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன்-வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும்  கும்மியாட்டம் நடைபெறுகிறது .


Cauvery Water: தமிழ்நாட்டுக்கு எல்லாம் தண்ணீர் தர முடியாது..பரபரப்பை கிளப்பிய கர்நாடக அமைச்சர்..நடக்கப்போவது என்ன?


கும்மியாட்டத்தை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆடுவதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது.  பலரும் ஆர்வமாக கலந்துகொண்டு கும்பி ஆட்டம் ஆடுவது நமது பாரம்பரிய கலை கால ஓட்டத்தில் மறைவதை தடுக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள். அழியும் நிலையில் இருந்த தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி நடனத்தை மீட்கும் இளைஞர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண