மதுரையில் அ.தி.மு.க., கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அ.தி.மு.க., கவுன்சிலர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக அ.தி.மு.க., கவுன்சிலராக தொடர்ந்து வெற்றி பெற்று பதவியில் உள்ள நிலையில், இன்று இவர் லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரை பாலமேடு அருகே தனது டூவிலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த கும்பல் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.

 

தகவல் அறிந்து அங்கு வந்த பாலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

 




 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்தலில் 4வது முறையாக அ.தி.மு.க., கவுன்சிலராக போட்டியிட்டு வென்றதால் தோல்வியடைந்தவர்களுக்கும் இறந்த சந்திரபாண்டிக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த வழக்கில் இறந்த கவுன்சிலர் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அதன் காரணமாக தற்போது பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் டூவிலரில் சென்ற அ.தி.மு.க., கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.