சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது புரசை உடைப்பு. இங்குள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் மூலம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மத்திய சிறை டி.ஜ.ஜி., பார்வையிட்ட போது நாமும் அங்கு சென்றோம். பின்னர் நம்மிடம் டி.ஐ.ஜி., பழனி கூறுகையில், " புரசை உடைப்பு பகுதியில் கடந்த 2013 முதல் திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. 2015 முதல் முழுவீச்சில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.








 

வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் சவாலாக விவசாயம் செய்யப்படுகிறது. சுமார் 85 ஏக்கர் சிறையில் 35 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது. வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட ஏகப்பட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. 350 தென்னை மரங்கள், 300 கொய்யா மரங்கள், 50 நெல்லி மரம், 40 முந்திரி மரம், 20 பலா மரம், எலுமிச்சை கன்று என ஏகப்பட்ட பலன் தரும் மரங்கள் உள்ளது.



அதே போல் தேக்கு, சந்தனம், மகாகனி, தேக்கு, ரோஸ் உட் என்று டிம்பர் மரங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மரங்களும் உள்ளது. குறைந்த கால பயிர்களான கத்தரி, வெண்டை, அவரை, கொத்தவரங்காய், பருத்தி, உளுத்தும் பயிர் செய்யப்படுகிறது. பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள் இங்குள்ள ஆடு, நாட்டு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரங்களாக பயன்படுத்துகின்றனர்.  தொடர்ந்து புரசை உடைப்பு சிறையில் விவசாயத்தை அதிகப்படுத்த  கிணறு அமைக்கசிறைத்துறை டி.ஜி.பி., அம்ரேஷ் பூஜாரி முயற்சி எடுத்துள்ளார்.



அதன் மூலம் இங்கு சிறப்பாக விவசாயம் செய்யமுடியும். திறந்தவெளி சிறை முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதால் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் குறைகிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து மனமாற்றம் அடைகின்றனர். அதே போல் சிறைவாசிகளுக்கு தண்டனை காலம் குறைவாக மாறுவதும் இந்த சிறையில் கூடுதல் சிறப்பு. இதனால் டி.ஜி.பி., அவர்கள் திறந்த வெளி சிறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்துகிறார். இங்கு விளைவிக்கப்படும் காய்கள் மற்றும் பழங்கள் மதுரை மத்திய சிறையில் உள்ள அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை விவசாயிகளுக்கும் கூடுதல் பணி கிடைக்கிறது. தற்போது புரசை உடைப்பு சிறையில் 51 சிறைவாசிகள் உள்ளனர். தொடர்ந்து சிறைவாசிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தி இயற்கை விவசாயம் அதிகப்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண