பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கதேவர் அவர்களின் முழு உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

தி.மு.க அமைச்சர்கள் - துரைமுருகன், கே.என்.நேரு, ஜ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, ராஜகண்ணப்பன் மற்றும் திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் -சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிலையில் பசும்பொன் நோக்கி புறப்பட்டனர்.

 





 


அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் தலைமையில்  அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அ.தி.மு.க., சார்பில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன்,திண்டுக்கல் சீனிவாசன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புலான் -அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



 








மதிமுக சார்பில்  பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செய்த பின் பேட்டியளிக்கையில்,” 46 வருடங்களாக தேவர் ஜெயந்தி விழாவில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறேன். பிரம்மச்சார்யம், ஒழுக்கம், சொன்னதை நிறைவேற்றியவர் முத்துராமலிங்க தேவர். சாதி மத வேறுபாட்டிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, தமிழகத்தை குழப்ப ஒரு கவர்னர் வந்துருக்கிறார். மக்களை குழப்பத்தில் வைத்துள்ளார், கவர்னர் அவதூறாக பேசிவருகிறார்.  தேவரை பற்றி தமிழக ஆளுநர் ரவி தெரிந்துகொள்ள வேண்டும்,  ஒடுக்கப்பட்ட மக்களை ஆலய வழிபாடு செய்ய செய்தவர் முத்துராமலிங்க தேவர்” என்றும் பேசினார்.